தொடர்ந்தும் சவுதி அணிக்கு பணிய மறுக்கிறது கட்டார்

Qatar
சவுதி தலைமையில், UAE, பஹ்ரெயின் உட்பட சில அரபு நாடுகள்  ஜூன் மாதம் 13 நிபந்தனைகளை  விதித்து இருந்தன.  அத்துடன் 13 நிபந்தனைகளும் நாளை  ஞாயிருக்கு முன் நடைமுறை செய்யப்படல் வேண்டும் என்றும் கூறப்படு இருந்தது. ஆனால்  கால எல்லைக்கு மேலும் சில மணிநேரம் மட்டும் இருக்கும் இந்நிலையில் கட்டார் பணியவில்லை.
.
கட்டாரின் வெளிவிவகார அமைச்சர் Al-Thani இன்று சனி இத்தாலியில் கூறிய கூற்று  ஒன்றில் “இந்த நிபந்தனைகள் கட்டார் அரசின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கம் கொண்டன என்பது எல்லோர்க்கும் தெரியும்” என்றுள்ளார்.
.
அரபு நாடுகளில் புகழுடன் இருக்கும் Al-Jazeera தொலைக்காட்சி நிறுவனத்தை மூட வேண்டும் என்பது இந்த 13 நிபந்தனைகளில் ஒன்று. இந்த நிபந்தனையை ஐ. நா.வின் Zeid Raad al-Hussein னும் இது ஒரு ஏற்கமுடியாத தாக்குதல் கண்டித்து உள்ளார்.
.
சவுதி அணியின் தடைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்க கட்டார் சுவிஸ் நாட்டு சட்ட நிறுவனமான Laliveவை நாடியுள்ளது.
.
இந்த தடையால் கட்டாரில் வாழும் சுமார் 11,300 சவுதி, பஹ்ரெயின், UAE பிரசைகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கட்டார் கூறுகிறது. அத்துடன் சவுதி அணி நாடுகளில் வாழும் சுமார் 19,000 கட்டார் பிரசைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனராம்.
.
சுமார் 1,000 பல்கலைக்கழக மாணவர் கட்டாரை விட்டு அவசரமாக வெளியேற வேண்டி இருந்ததாம்.
.
சவுதி-ஈரான் மோதலின் ஒரு அங்கமே இந்த மோதலும்.
.