நாசாவின் சந்திரனுக்கான இன்றைய கல ஏவல் இடைநிறுத்தம்

நாசாவின் சந்திரனுக்கான இன்றைய கல ஏவல் இடைநிறுத்தம்

அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதற்கு முதல் படியாக இன்று ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்களை கொண்டிராத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க ஏவும் நடவடிக்கை இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

The countdown மணிக்கூடு 40 செக்கனில் நிறுத்தப்பட்டு உள்ளது. அதாவது ஏவலுக்கு 40 செக்கன் இருக்கையிலேயே ஏவல் நிறுத்தப்பட்டு உள்ளது.

இயந்திரத்தில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே ஏவல் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தவறு அறியப்பட்டு, திருத்தத்தப்பட்ட பின்னரே மீண்டும் ஏவல் திகதி அறிவிக்கப்படும்.

சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட SLS ஏவுகணை ஏற்கனவே Kennedy ஏவு தளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உள்ளது. இம்முறை விண்வெளி வீரர்களுக்கு பதிலாக மனிதத்துக்கு நிகரான பொம்மைகள் மட்டுமே பயணிக்கும். இந்த பொம்மைகளில் பல ஆயிரம் sensor கள் பொருத்தப்பட்டு தரவுகள் பெறப்படும்.

இதன் அதிகூடிய வேகம் 39,400 km/hr. பூமியில் இருந்து சுமார் 450,600 km தூரம் இது செல்லும். இது மீண்டும் பூமிக்கு வரும்போது 2.1 மில்லியன் km தூரம் பயணித்து இருக்கும். இது திரும்பும்போது உராய்வு காரணமாக இதன் மேற்பரப்பு வெப்பம் 2,760 C ஆக இருக்கும்.

RS-25 வகை இயந்திரங்களை கொண்ட SLS ஏவுகணையானது Saturn V வகை ஏவுகணையிலும் 15% அதிக உந்தத்தை கொண்டது.

2024ம் ஆண்டு ஏவப்பட உள்ள Artemis 2 விண்வெளி வீரருடன், சந்திரனில் இறங்காது, சந்திரனின் விண்ணில் சுற்றி வலம் வரும்.

2025ம் ஆண்டு ஏவப்பட உள்ள Artemis 3 விண்வெளி வீரரை சந்திரனில் தரையிறக்கும்.