நான்கு விமானங்கள் பாக்கித்தானுக்கு குத்தகையில்

SriLankan

இலங்கை விமான சேவையான ஸ்ரீலங்கன் தனது புதிய Airbus A330 விமானங்களில் நான்கை பாகிஸ்தான் விமான சேவைக்கு (PIA) குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளது. உடனடியா ஒன்றும், பின்னர் மூன்றுமாக மொத்தத்தம் PIA யினால் குத்தககைக்கு எடுக்கப்டும். 2012 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்ட 7 இவ்வகை விமானங்களில் நான்கே இவ்வாறு குத்தகைக்கு விடப்படவுள்ளது.
.
ஸ்ரீலங்கன் விமான சேவை தபோது சுமார் $3.25 பில்லியன் கடனில் உள்ளது. குத்தகைக்கு விடப்படும் விமானங்கள் ஒவ்வொன்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் $450,000 ஐ குத்தகை பணமாக பெரும். அந்த வருமானம் எறக்குறைய அந்தந்த விமானத்தின் செலவுக்கே போதுமாக இருக்கும்.
.
2014 ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் 8 Airbus A350 வகை விமானங்களை கொள்வனவு செய்ய இணங்கி இருந்தது. ஆனால் பின்னர் நான்கை இரத்து செய்து, இன்றுமொன்றை விற்றும் இருந்தது.
.
2008 ஆம் ஆண்டுவரை Emirates விமான சேவையுடன் இணைந்து இயங்கிய போது, ஸ்ரீலங்கன் இலாபகரமாக இயங்கியது. 2008 இல் பிரிந்த பின், தொடர்ந்து நடடத்தில் இயங்குகிறது. ஸ்ரீலங்கன் 2009 ஆம் ஆண்டிலேயே கடையாக இலாபம் கொண்டிருந்தது.

.

குத்தகைக்கு விடப்படும் விமானங்கள் Frankfurt, Paris, Rome ஆகிய இடங்களுக்கு ஸ்ரீலங்கன் மேற்கொள்ளும் சேவைகளுக்காக கொள்வனவு செய்யப்பட்டு இருந்தது. இந்த இடங்களுக்கான ஸ்ரீலங்கனின் சேவைகள் விரைவில் நிறுத்தப்படவுள்ளன.
.