நாலு கிழமைகளில் அமெரிக்கா 22 மில்லியன் வேலைகளை இழந்தது

Coronavirus

கடந்த 4 கிழமைகளில் சுமார் 22 மில்லியன் (22,034,000) வேலைகளை அமெரிக்கா இழந்து உள்ளது.  கடந்த கிழமை மட்டும் அமெரிக்கா சுமார் 5.2 மில்லியன் வேலைகளை கொரோனா காரணமாக இழந்து உள்ளது. வேலை இழப்புகளை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா சுமார் 2.2 டிரில்லியன் பணத்தை செலவழித்து இருந்தும் வேலை இழப்புகள் தொடர்கின்றன.
.
மந்தமான பொருளாதாரம் வரும் நவம்பர் தோர்தலில் தனக்கு பாதகமாக அமையலாம் என்ற பயத்தில் சனாதிபதி ரம்ப் வர்த்தகங்களை மே மாதம் முதல் ஆரம்பிக்க அழைப்பு விட விரும்பினாலும், நியூ யார்க், கலிபோர்னியா போன்ற பல மாநிலங்கள் நிலைமை தொடர்ந்தும் பாதகமாக உள்ளதாக கூறியுள்ளன.
.
கடந்த திங்கள் New Jersey போலீசார்ருக்கு வயோதிபர் பராமரிப்பு நிலையம் ஒன்றின் அருகே உள்ள வெளிப்புற கூடு ஒன்றில் (shed) ஒரு பிரேதம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவ்வாறு பிரேதம் கூட்டில் இருப்பதை காணவில்லை. அனால் அந்த வயோதிபர் இல்லத்தில் 17 உடல்கள் அங்கிருந்த சவக்காலை ஒன்றில் இருந்ததை கண்டுள்ளனர். அந்த சவக்காலை 4 பிரேதங்களை வைக்க மட்டுமே போதுமானது.
.
Sussex County என்ற இடத்தில் உள்ள Andover Subacute and Rehabilitation என்ற மேற்படி வயோதிபர் நிலையம் 700 படுகைகளை கொண்டது. இந்த நிலையத்தில் பணியாற்றும் 41 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்றி உள்ளது.
.
பிரித்தானியாவில் கொரோனாவுக்கு பலியானோர் தொகை 13,729 ஆக உள்ளது. அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தால் பிரித்தானியா மே 15 ஆம் திகதி வரை பொதுமக்கள் முடக்கத்தை நீடித்து உள்ளது.
.
கடந்த 24 மணித்தியாலங்களில் பிரான்சில் 753 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அதனால் அங்கு கொரோனாவுக்கு மரணித்தோர் தொகை 17,920 ஆக அதிகரித்து உள்ளது.
.
கனடாவில் இதுவரை மட்டும் சுமார் 1,200 பலியாகி உள்ளனர். அத்தொகை அரசு கடந்த கிழமை எதிர்பார்த்த தொகையிலும் இரண்டு மடங்கு அதிகம். புதிய கணிப்பின்படி சுமார் 11,000 முதல் 22,000 பேர் வரை கனடாவில் கொரோனாவுக்கு பலியாகலாம் என்று அரசு கூறுகிறது.
.
உலக அளவில் 2.1 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றியும், 140,371 பேர் பலியாகியும் உள்ளனர். அமெரிக்காவில் தொற்றியோர் தொகை 648,788 ஆகவும், பலியானோர் தொகை 30,920 ஆகவும் உள்ளன. அதேவேளை இத்தாலியில் 22,170 பேரும், ஸ்பெயினில் 19,130 பேரும், பிரான்சில் 17,188 பேரும், பிரித்தானியாவில் 13,755 பேரும் பலியாகி உள்ளனர்.
.