நியூசிலாந்தில் இலங்கையரின் கத்தி குத்துக்கு 6 பேர் காயம்

நியூசிலாந்தில் இலங்கையரின் கத்தி குத்துக்கு 6 பேர் காயம்

நியூசிலாந்தின் Auckland நகரில் இலங்கையர் ஒருவர் செய்த கத்தி குத்துக்கு 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். கத்தி குத்தை செய்த இலங்கையர் போலீசால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த வன்முறையை செய்தவர் ஒரு ISIS ஆதரவாளர் என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது.

பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் நியூசிலாந்துக்கு 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்று இருந்தார். இன்று வெள்ளி பிற்பகல் 2:40 மணியளவில் அப்பகுதியில் உள்ள Countdown என்ற கடைக்கு சென்ற இவர் அங்கு விற்பனைக்கு இருந்த கத்தி ஒன்றை எடுத்து அங்கிருந்தவர்களை குத்த ஆரம்பித்தார்.

ISIS வீடியோக்களை கொண்டிருந்த  இவர் 2016ம் ஆண்டு முதல் போலீசாரின் கவனத்துக்கு வந்திருந்தார். அத்துடன் இவர் அண்மைக்காலமாக 24 மணிநேர கண்காணிப்பில் இருந்தவர். இன்று வெள்ளியும் இவர் தனது வீட்டில் இருந்து வெளியேறி Countdown கடைக்கு வரும்வரை போலீசார் இவரை பின்தொடர்ந்து உள்ளனர். அதனாலேயே கத்திக்குத்து ஆரம்பித்து 60 செக்கனில் அவர் பின்தொடர்ந்த பொலிஸாரால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

கத்திக்குத்தை நிகழ்த்த முன் இவர் “அல்லாஹு அக்பர்” என்று சத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது.