நீர்மூழ்கி ஏவுகணையை ஏவியது வடகொரியா

Trump_Kim

புதன்கிழமை காலை 7:00 மணியளவில் வடகொரியா முதல் தடவையாக நீர்மூழ்கியில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது. இந்த பரிசோதனை வடகொரியாவுக்கு மிகையான பலத்தையும் வழங்கி உள்ளது.
.
நிலத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை எதிரி கண்காணிப்பது இலகு. ஆனால் கடல் நீருக்குள் மறைந்து நகரும் ஏவுகணையை சாதாரண செய்மதிகள் மூலம் கண்காணிக்க முடியாது. ஆழ்கடல்களை கண்காணிப்பது மிகவும் செலவான காரியம்.
.
புதன்கிழமை ஏவப்பட்ட ஏவுகணை நிலைக்குத்தாக ஏவப்பட்டது. அதனால் அது 910 km உயரம் சென்று, 450 km தூரத்தில் கடலில் வீழ்ந்தது. பதிலாக யுத்தகால முறையில் ஏவினால் இந்த ஏவுகணை 1,900 km தூரம்வரை சென்று தாக்கக்கூடியது என்று கணிக்கப்பட்டு உள்ளது.
.
ஒபாமா ஒரு இழக்கமானவர் என்றும் அதனாலேயே வடகொரியா ஏவுகணைகளை ஏவுகிறது என்றும் ஒபாமா காலத்தில் கூறிய ரம்ப் 3 தடவைகள் நேரடியாக சந்தித்து பேசிய கிம் இந்த வருடம் மட்டும் 11 தடவைகள் ஏவுகணைகளை ஏவிய பின்னரும் மௌனமாக உள்ளார்.
.