நெருக்கடியை தவிர்க்க NATO வுக்கு ரஷ்யா நிபந்தனைகள்

நெருக்கடியை தவிர்க்க NATO வுக்கு ரஷ்யா நிபந்தனைகள்

ரஷ்யாவுக்கும் NATO அணி நாடுகளுக்கும் இடையில் தற்போது மூண்டுள்ள இராணுவ நெருக்கடியை தவிர்க்க ரஷ்யா பல நிபந்தனைகளை NATO வுக்கும், அமெரிக்காவிற்கும் இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளது. ஆனால் அமெரிக்காவும், NATO வும் அந்த நிபந்தனைகளை பகிரங்கத்தில் நிராகரித்து உள்ளன.
ரஷ்யா விடுத்த நிபந்தனைகள்:

1) NATO அணி தனது இராணுவ நடவடிக்கைகளை கிழக்கு ஐரோப்பா, யுக்கிரைன், மத்திய ஆசியா, Caucasus ஆகிய பகுதிகளில் நிறுத்த வேண்டும்.

2) NATO கிழக்கு நோக்கிய தனது பரவலை, குறிப்பாக யுக்கிரைனை NATO அணி நாடாக்குவதை நிறுத்த வேண்டும்.

3) சிறு தூர, நடுத்தர தூர ஏவுகணைகளை எல்லை பகுதியில் இருந்து இரத்தரப்பும் (NATO, ரஷ்யா) விலக்க வேண்டும்.

4) ஒரு brigade க்கு அதிகமான இராணுவ தொகை எல்லை பகுதிகளில் இராணுவ பயிற்சிக்கு உட்படக்கூடாது.

5) இரு தரப்பும் மறு தரப்பை எதிரியாக கருதாது பேச்சுக்கள் மூலமே முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்.

6) ரஷ்யாவோ அல்லது அமெரிக்காவோ மற்றைய நாடுகளுள் அணு ஆயுதங்களை கொண்டிருக்க கூடாது.

NATO அணியை இணக்கத்துக்கு அழுத்தும் நோக்கில் ரஷ்யா தொடர்ந்தும் தனது படைகளை யுக்கிரைன் எல்லையில் குவித்து வருகிறது. ரஷ்யா மீண்டும் யுக்கிரனுள் நிலைய திட்டமிடுகிறது என்று மேற்கு நாடுகள் கூறுகின்றன.

இந்த விசயத்தில் சீனா ஏற்கனவே ரஷ்யாவுக்கு தனது ஆதரவை புதன்கிழமை தெரிவித்து உள்ளது. அத்துடன் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள SWIFT வங்கி பரிமாற்றத்தில் இருந்து தம்மை விடுவிக்கவும் இணங்கி உள்ளன. அதற்கு ஏற்ப தமது பண பரிமாற்றத்தை தமது நாணயங்களிலேயே செய்கின்றன.

இந்த ஆண்டின் முதல் 9 மாதத்தில் மட்டும் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் $100 பில்லியன் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுள்ளது. அதில் 17% தொகையை சீனா நாணயமான யுவான் மூலமே செலுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 2020ம் ஆண்டுக்கான ரஷ்யாவின் அந்நிய செலவாணியின் 12% சீன நாணயத்திலேயே இருந்துள்ளது.