நேட்டோவின் இரட்டை வேடத்தை அறிகிறது யுக்கிரைன்

நேட்டோவின் இரட்டை வேடத்தை அறிகிறது யுக்கிரைன்

யுக்கிரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி, நேட்டோவில் (NATO) இணைய ஆசை காட்டி ரஷ்யாவுடன் மோத வைத்த நேட்டோ  யுக்கிரைனின் வானத்தை no-fly zone மூலம் ரஷ்ய விமானங்களில் இருந்து பாதுகாக்க மாறுகிறது.

யுக்கிரைன் சனாதிபதி தனது நாட்டு வான் பரப்பு மீது விமானங்கள் பறப்பதை தடை செய்யுமாறு நேட்டோவை கேட்டிருந்தார். அவ்வாறு செய்வதன் மூலம் ரஷ்யாவின் யுத்த விமானங்களை தடை செய்யலாம் என்பதே யுக்கிரைன் சனாதிபதியின் நோக்கம். ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளது நேட்டோ. தற்போது இடம்பெறும் ரஷ்யா-யுக்கிரைன் யுத்தம் தமது யுத்தம் அல்ல (we are not part of this) என்றுள்ளது நேட்டோ.

யுக்கிரைன் வான் பரப்பை தடை செய்தால் அந்த தடையை உறுதி செய்ய நேட்டோ யுத்த விமானங்களை கண்காணிக்க வேண்டும். தடையை மீறும் விமானங்களை நேட்டோ தண்டிக்க நேரிடும். அது ரஷ்யா மீது நேட்டோ நேரடி யுத்தத்தில் இறங்க வைக்கும். அது உலக யுத்தத்திலேயே முடியும் என்பதால் நேட்டோ அதை விருப்பவில்லை.

அமெரிக்காவும் தமது படைகள் இந்த யுத்தத்தில் ஈடுபடாது என்று ஏற்கனவே கூறி உள்ளது.

நேட்டோ வழங்கும் ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தி யுக்கிரைன் ரஷ்யாவை வெல்ல முடியாது. அதனால் ஓர் நீண்ட யுத்தத்தின் பின், பலத்த அழிவுகளின் பின், யுக்கிரைன் ரஷ்யாவுடன் சமாதானத்துக்கு செல்ல நேரிடும்.