நைஜீரியாவில் மேலும் 317 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவில் மேலும் 317 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள Zamfara மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆயுததாரர் 317 மாணவிகளை கடத்தி உள்ளனர் என்கிறது அந்நாட்டு போலீஸ். இது கடந்த ஒரு கிழமைக்குள் இடம்பெறும் இரண்டாவது கடத்தல்.

மேற்படி மாணவிகள் Jangebe என்ற நகரத்தில் உள்ள Government Girls Science Secondary School என்ற பாடசாலையில் இருந்தே கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தேடும் பணியில் இராணுவம் உள்ளதாக அரசு கூறுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 344 மாணவன்கள் வடமேற்கு பகுதியில் உள்ள Kankara நகரில் இருந்து கடத்தப்பட்டு இருந்தனர். அந்த மாணவன்கள் ஒரு கிழமையின் பின் விடுவிக்கப்பட்டு இருந்தனர்.

2018ம் ஆண்டு Boko Haram என்ற குழு 100 மாணவிகளை Dapchi என்ற நகர் பாடசாலையில் இருந்து கடத்தி இருந்தது. அவர்களில் ஒருத்தியை தவிர ஏனையோர் பின்னர் விடுவிக்கப்பட்டு இருந்தனர். அந்த விடுவிப்புக்கு பணம் செலுத்தியதாக ஐ.நா. கூறியிருந்தது.

2014ம் ஆண்டு Boko Haram குழு 276 மாணவிகளை Chibok என்ற நகர் பாடசாலையில் இருந்து கடத்தி இருந்தது. அதில் பலர் பின்னர் இராணுவத்தால் மீட்கப்பட்டு அல்லது பணம் வழங்கி விடுவிக்கப்பட்டு இருந்தனர். அதில் சுமார் 100 மாணவிகள் தற்போதும் இருப்பிடம் அறியப்படாது உள்ளனர்.

முதலில் ஆயுத குழுக்களான Boko Haram மற்றும் Islamic State West Africa Provence மட்டுமே இவ்வாறு மாணவர்களை கடத்தி இருந்தாலும் தற்போது யார் இந்த கடத்தல்களை செய்கிறார்கள் என்பதை அறியாது நைஜீரிய அரசு தவிக்கிறது. கடத்தப்பட்ட மாணவர்களை மீட்க அரசு பணம் வழங்குவது புதிய கடத்தல்களை ஊக்கிவிக்கிறது என்றும் கூறப்படுகிறது. ஆனால் அரசு அவ்வாறு தாம் பணம் வழங்குவது இல்லை என்கிறது.