நைஜீரியாவை தாக்க தயாராகும்படி அமெரிக்க படைகளுக்கு சனாதிபதி ரம்ப் சனிக்கிழமை கட்டளை விடுத்துள்ளார். நைஜீரியாவில் கிறீஸ்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் என்பதே ரம்ப் தாக்குதல் முனைவுக்கு முன் வைக்கும் காரணம்.
நைஜீரியாவின் சில மாநிலங்கள் வன்முறைகள் நிறைந்தவை. சில மாநிலங்களில் Boko Haram போன்ற இஸ்லாமிய குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டாலும், பெருமளவு வன்முறைகள் இனங்களுக்கு இடையேயும், குழுக்களுக்கு இடையேயும், மற்றும் வேறுபட்ட தரப்புகளுக்கு இடையேயும் இடம்பெறுகின்றன. Boko Haram நைஜீரியா, நிஜார், Chad, கமரூன், மாலி போன்ற பல நாடுகளில் இயங்குகிறது.
நைஜீரியாவில் கிறீஸ்தவர்களுக்கு எதிராக மட்டுமன்றி இஸ்லாமியருக்கும் எதிராகவும் வன்முறைகள் இடம்பெறுகின்றன. இஸ்லாமியருக்கு இடையேயும் வன்முறைகள் இடம்பெறுகின்றன. கிறீஸ்தவ தேவாலயங்கள் மட்டுமன்றி, இஸ்லாமிய பள்ளிவாசல்களும் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. இந்த வன்முறைகளுக்கு நலிந்துவரும் பொருளாதார வசதிகளும் காரணம்.
நைஜீரிய அரசு இந்த வன்முறைகளுக்கு காரணம் அல்ல என்றாலும் இவற்றை நைஜீரியா தடுக்கவில்லை என்பதே ரம்பின் குற்றச்சாட்டு.
