பங்களாதேசத்துக்கு கீழே இந்திய தனிநபர் GDP

பங்களாதேசத்துக்கு கீழே இந்திய தனிநபர் GDP

2020 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் தனிநபர் GDP (per capita Gross Domestic Product) பங்களாதேசத்தின் தனிநபர் GDP யிலும் குறைவாக இருக்கும் என்று நேற்று செய்வாய் IMF கூறி உள்ளது.​ இந்திய பொருளாதாரம் மீதான IMF இந்த நேற்றைய கணிப்பு முன்னைய கணிப்பிலும் குறைவாக உள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முடியவுள்ள இந்தியாவின் 2020 வர்த்தக ஆண்டுக்கான தனிநபர் GDP $1,877 ஆக மட்டுமே இருக்கும் என்கிறது IMF. அக்காலத்தில் பங்களாதேசத்தின் தனிநபர் GDP $1,888 ஆக இருக்கும்.

கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 4.5% ஆக மட்டுமே இருக்கும் என்று IMF கூறியிருந்தது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரா வீழ்ச்சி 10.3% ஆக இருக்கும் என்று தற்போது கூறுகிறது IMF.

IMF கணிப்புப்படி உலக அளவில் ​2020 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4.4% ஆகி மட்டுமே இருக்கும். 2021 ஆம் ஆண்டில் அது 5.2% ஆக அதிகரிக்கலாம்.

BRICS அணியில் உள்ள நாடுகளுள் பிரேசிலின் பொருளாதாரம் 5.8% ஆலும், ரஷ்யாவின் பொருளாதாரம் 4.1% ஆலும், தென்னாபிரிக்காவின் பொருளாதாரம் 8.0% ஆலும் வீழ்ச்சி அடையும். சீனாவின் பொருளாதாரம் 1.6% ஆல் வளர்ச்சி அடையும்.

இலங்கையின் பொருளாதாரம் 3.3% ஆல் வீழ்ச்சி அடைந்தாலும், இலங்கையின் தனிநபர் GDP $3,700 ஆகி இருக்கும்.

வரைபு: IMF