பங்களாதேசத்துக்கு சீனா $24 பில்லியன் கடனுதவி

Bangladesh

பங்களாதேசத்துக்கு சுமார் $24 பில்லியன் கடனுதவி செய்ய சீனா முன்வந்துள்ளது. இந்தியாவில் நடைபெறவுள்ள BRICS மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா செல்லும் சீன ஜனாதிபதி பங்களாதேசமும் செல்லவுள்ளார். அப்போதே இந்த கடனுதவி விபரம் வெளியிடப்படும்.
.
இந்த கடன் உதவியை பயன்படுத்தி, பங்களாதேசத்தில் 1320 MW மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், ரயில் சேவை உட்பட சுமார் 25 திட்டங்களை சீனா மேற்கொள்ளும்.
.
சீனாவுக்கு போட்டியாக இந்தியாவும், ஜப்பானும் இணைந்து கடனுதவி செய்ய கடந்த வருடம் முன்வந்திருந்தன. ஆனால் இந்திய-ஜப்பான் உதவி தொகை $2 பில்லியன் மட்டுமே.
.

கடந்த 30 வருடங்களின் பின் இன்முறையே சீன ஜனாதிபதி ஒருவர் பங்களாதேசம் செல்கிறார்.
.