பங்களாதேச பிரதமர் அணியின் சட்டவிரோதங்கள்?

பங்களாதேச பிரதமர் அணியின் சட்டவிரோதங்கள்?

கடந்த திங்கள் கட்டாரை (Qatar) தளமாக கொண்ட Al Jazeera செய்தி சேவை வெளியிட்ட “All the Prime Minister’s Men” என்ற தலைப்பிட்ட புலனாய்வு ஆவணத்தில் தற்போதை பங்களாதேச பிரதமரின் அணி செய்யும் சட்டவிரோதங்கள் விபரிக்கப்பட்டு உள்ளன. அரசுடன் நெருக்கமாக உள்ள உயர் அதிகாரிகள் செய்யும் கள்ள கடவுச்சீட்டு தயாரித்தல், அரச குத்தகைகள் மூலம் இலாபம் பெறல், தொழில்வாய்ப்புகளில் மோசடி செய்தல் போன்ற விரோதங்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆவணத்துக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணைகளை செய்துள்ளது Al Jazeera.

1996ம் ஆண்டு இடம்பெற்ற மறுகட்சி உறுப்பினர் ஒருவரின் படுகொலை தொடர்பாக தேடப்பட்டிருந்த Haris Ahmend, Anis Ahmed ஆகிய சகோதரர்கள் முற்றையே Hungary மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு தப்பி ஓட அவர்களின் சகோதரரும், இராணுவத்தின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் Aziz Ahmed உதவி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Hungary சென்ற Haris சகோதர ஜெனெரலின் உதவியுடன் தனது பெயரை Mohammad Hasan என்று மாற்றி, ஐரோப்பா எங்கு வர்த்தகங்களையும், சொத்துக்களையும் கொள்வனவு செய்துள்ளதாகவும் மேற்படி ஆவணம் கூறுகிறது. அதற்கான பணம் பங்களாதேசத்தில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பங்களாதேசத்தில் போலீஸ் பதவிகள் உட்பட அரச பதவிகளை விற்பனை செய்தும் Ahmed குடும்பம் பணம் சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தப்பியோடிய Haris, Anis இருவரும் தற்போதைய பிரதமர் Sheikh Hasina வுக்கு அவர் எதிர்க்கட்சியாக இருந்தபோது மெய்ப்பாதுகாவலராக பணியாற்றியவர்கள் என்றும் கூறப்படுகிறது.

பங்களாதேச அரசு குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது. அத்துடன் பங்களாதேச பத்திரிகைகள் Al Jazeera ஆவணத்தையோ, அதன் சுருக்கத்தையோ கூறாது, அதற்கான அரசின் மறுப்பை மட்டும் கூறியுள்ளன.