பட்டினியை இஸ்ரேல் ஆயுதம் ஆக்குகிறது என்கிறது Amnesty 

பட்டினியை இஸ்ரேல் ஆயுதம் ஆக்குகிறது என்கிறது Amnesty 

இஸ்ரேல் காசாவில் பட்டினி போடலையும் ஆயுதமாக்கி உள்ளது என்று Amnesty International இன்று வியாழன் கூறியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து இயக்கும் Gaza Humanitarian Foundation (GHF) என்ற இராணுவ மயமாக்கப்பட்ட உதவி வழங்கும் அமைப்பு காசாவில் செய்வது genocide என்கிறது Amnesty.

புதன்கிழமை இரவு மட்டும் உதவி பெற சென்ற 45 பலஸ்தீனர் GHF அருகே சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். வேறு உதவி வழங்கல் இடங்களில் மேலும் 40 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் காசாவில் உணவு, மருந்து போன்ற அவசிய பொருட்களை தடை செய்து, மக்களை மீண்டும் மீண்டும் நகர வைத்து, தொடர்ச்சியாக குண்டுகளை வீசி, நீர் வழங்கல், மின்சார வழங்கல் கட்டுமானங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றை அழித்து மக்களை வதைக்கிறது என்கிறது Amnesty.

GHF ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இவற்றுக்கு அருகே மொத்தம் 650 பலஸ்தீனர் சூடுகளுக்கு இலக்காகி பலியாகி உள்ளனர் என்கிறது Amnesty. அத்துடன் 4,500 பேர் காயமடைந்து உள்ளனர்.