பதவி விலகுவாரா பிரித்தானிய பிரதமர்?

பதவி விலகுவாரா பிரித்தானிய பிரதமர்?

சுமார் 38 பிரித்தானிய அமைச்சர்கள் (secretaries) அல்லது உயர் அதிகாரிகள் பிரதமரை கைவிட்டு பதவி விலகி உள்ள நிலையில் பிரதமர் Boris Johnson பதவி விலக அழுத்தங்கள் வலுவாகி வருகின்றன. ஆனாலும் தான் பதவி விலகேன் என்கிறார் Johnson.

ஒரே நாளில் பிரதமர் குறைந்தது 14 அமைச்சர்களை இழந்து உள்ளார்.

இன்று ஆளும் கட்சியின் இரு குழுக்கள் பிரதமரை சந்தித்து உள்ளன. அதில் ஒன்று பிரதமரை பதவி விலக்கும்படி அழுத்தி உள்ளது. ஆனால் மற்றைய குழு பிரதமரை தொடர்ந்தும் பதவியில் இருக்க வேண்டியுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் Priti Patel, Chancellor Nadhim Zahawi, Sajid Javid, Rishi Sunak, Grant Shapps, Michael Gove, Kwasi Kwarteng ஆகியோர் பிரதமரை பதவி விலக வற்புறுத்துகின்றனர்.

அதேவேளை வெளியுறவு அமைச்சர் Liz Truss, பாதுகாப்பு அமைச்சர் Ben Wallance, உதவி பிரதமர் Dominic Raab ஆகியோர் தொடர்ந்தும் பிரதமருக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

கடந்த மாத பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் பிரதமர் 211 ஆதரவு வாக்குகளை பெற்று இருந்தார், எதிராக 148 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. முன்னர் ஆதரவாக அல்லது நடுநிலையில் இருந்த 75 உறுப்பினர்கள் தற்போது பிரதமரை எதிர்க்கின்றனர். அதனால் மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நிகழுமாயின் பிரதமர் தோல்வி அடையக்கூடும்.