பந்துல: டாலருக்கான மாற்று விகிதம் ரூபா 350 ஆகலாம்

பந்துல: டாலருக்கான மாற்று விகிதம் ரூபா 350 ஆகலாம்

அமெரிக்க டாலர் ஒன்றுக்கான இலங்கை நாணயத்தின் மாற்று விகிதம் ரூபா 250, 300 அல்லது 350 ஆகலாம் என்று கூறியுள்ளார் இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன. ஆனாலும் எப்போது இலங்கை நாணயம் அந்த மாற்று விகிதங்களை அடையும் என்று அவர் கூறவில்லை. தற்போது அமெரிக்க டாலருக்கான இலங்கை நாணய மாற்று விகிதம் சுமார் Rs 200 ஆக உள்ளது.

இலங்கை 1948ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது ஒரு அமெரிக்க டாலருக்கான இலங்கை ரூபா மாற்று விகிதம் Rs 4.77 ஆக மட்டுமே இருந்தது. 1885ம் ஆண்டு முதல் சுதந்திரம் வரை இலங்கை நாணய பெறுமதி இந்திய நாணயத்துக்கு நிகராக இணைக்கப்பட்டு (1:1) இருந்தது.

1978ம் ஆண்டு அளவில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கான இலங்கை நாணய மாற்று விகிதம் 8.00 ரூபாய்களாக இருந்தது. 2005ம் ஆண்டு அது 105 ரூபாய்களாக வீழ்ச்சி அடைந்து இருந்தது. 2014ம் ஆண்டில் அது 182 ரூபாய்களாக மேலும் வீழ்ச்சி அடைந்து இருந்தது.