பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்கவுள்ளது இந்தியா

Burma

பர்மாவுக்கு ஆயுதங்கள் வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்து உள்ளது. பர்மாவின் படைகள் அந்நாட்டு Rohingya மக்கள் மீது செய்யும் கொடுமைகளை உலகம் கண்டிக்கும் இந்த நேரத்திலேயே இந்தியா பர்மாவின் படைகளுக்கு ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது.
.
பர்மாவின் கடற்படை தளபதி தற்போது இந்தியாவுக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டு உள்ளார். இந்த பயண காலத்திலேயே மேற்படி ஆயுத விற்பனை தெடர்பாக உரையாடப்பட்டு உள்ளது. அத்துடன் பர்மாவின் கடற்படைக்கு இந்தியா பயிற்சிகளும் வழங்க இணங்கி உள்ளது.
.
நேற்று புதன்கிழமை பர்மாவின் தளபதி Admiral Tin Aung San இந்திய பாதுகாப்பு அமைச்சர் Nirmala Sitaraman, இந்திய தரைப்படை, வான்படை, கடற்படை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து இருந்தார். பின்னர் பர்மாவின் தளபதி மும்பாயில் உள்ள கப்பல் கட்டும் இடம் ஒன்றையும் பார்வையிட்டார்.
.
மாறாக பிரித்தானியா பர்மாவின் படைகளுக்கு பயிற்சி வழங்குவதை இடைநிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது. அந்நாட்டு மக்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு பர்மாவிடம் பிரித்தானியா கேட்டுள்ளது.
.

பர்மா சீனாவின் பக்கம் சாயாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதே தற்போது இந்தியாவின் முக்கிய நோக்கம். ஆனால் பர்மா சீனாவிடனும் தொடர்புகளை கொண்டுள்ளது.
.