பர்மா Arakan ஆயுத குழுவை இந்திய பா.உ. சந்திப்பு

பர்மா Arakan ஆயுத குழுவை இந்திய பா.உ. சந்திப்பு

பர்மாவின் இந்திய எல்லையோரம் பர்மாவின் இராணுவத்துக்கு எதிராக போராடிவரும் Arakan Army என்ற  குழுவை இந்திய மிசோராம் மாநிலத்து Rajya Sabha பாராளுமன்ற உறுப்பினர் K. Vanlalvena சந்தித்துள்ளார்.

இந்திய-பர்மா எல்லைக்கு சென்ற இவர் பர்மாவின் Chin மாநிலத்தின் உள்ளே 12 km தூரம் சென்று Paletwa என்ற இடத்தில் Arakan குழுவை சந்தித்து உள்ளார்.

இவரின் பயணம் பர்மா ஊடான Kaladan Multi Modal Transit Transport Project (KMMTTP) என்ற இந்திய திட்டத்தை முன்னெடுப்பதே. IRCON என்ற இந்திய நிறுவனமே இந்த கட்டுமானத்தை செய்கிறது.

சீனாவுடன் இந்தியா பெரும் யுத்தம் ஒன்றுக்கு ஆளானால் பங்களாதேசத்துக்கு கிழக்கே உள்ள அசாம், அருணாச்சல் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுர, மிசோராம் ஆகிய மாநிலங்கள் இந்திய பெரு நிலத்தில் இருந்து பிரிக்கப்படலாம், இந்தியாவின் உதவியுடன் கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து பங்களாதேசம் ஆனதுபோல்.

அதனாலேயே இந்தியா மேற்படி மாநிலங்களுக்கு இரண்டாம் வழி ஒன்றை கொண்டிருக்க விரும்புகிறது. அது பர்மா அல்லது பங்களாதேசம் ஊடாகவே செல்ல வேண்டும்.