பலஸ்தீனர் மீது இஸ்ரேல் apartheid ஆட்சி, என்கிறது Amnesty

பலஸ்தீனர் மீது இஸ்ரேல் apartheid ஆட்சி, என்கிறது Amnesty

இஸ்ரேலிலும், இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள பலஸ்தீனர் இடங்களில் வாழும் பலஸ்தீனர் மீது இஸ்ரேல் திட்டமிட்ட apartheid ஆட்சி செய்கிறது என்று பிரித்தானியாவை தளமாக கொண்ட Amnesty International இன்று செவ்வாய் கூறியுள்ளது. இன்று வெளியிட்ட 278 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையை Amnesty கடந்த 4 ஆண்டுகளாக தயாரித்து உள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்ட Human Rights Watch அமைப்பும், இஸ்ரேலை தளமாக கொண்ட B’Tselem என்ற அமைப்பும் Amnesty இன்று கூறுவதை ஏற்கனவே கூறி உள்ளன. Apartheid ஆட்சி ‘crime against humanity’ என்கிறது சர்வதேச சட்டங்கள். ஆனாலும் அமெரிக்க அரசிவாதிகளின் பாதுகாப்பில் உள்ள இஸ்ரேலை எவரும் தண்டிக்க முடியாது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனர் இடங்களில் உள்ள 140 சட்டவிரோத குடியிருப்புகளில் மட்டும் சுமார் 600,000 யூதர்கள் தற்ப்போது குடியமர்த்தப்பட்டு உள்ளனர்.

1948ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை தென் ஆபிரிக்க வெள்ளை இனத்தவரின் அரசு கருப்பு இனத்தவர் மீது திணித்த இனவெறி ஆட்சியே apartheid ஆட்சி என்று அழைக்கப்பட்டது.