பாப்பாண்டவர் Rohingya என்ற சொல்லை பயன்படுத்த தடை?

Burma

இந்த மாதம் 27 முதல் டிசம்பர் 2 வரை பாப்பாண்டவர் பங்களாதேஷ், பர்மா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளார். இவரின் பர்மா பயணத்தின்போது அங்கு இவர் ரோஹிங்கியா (Rohingya) என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பர்மாவின் கிறீஸ்தவ Cardinal Charles Maung Bo கேட்டுள்ளார்.
.
பெரும்பான்மையாக பௌத்தர்களை கொண்ட பர்மாவின் அரசு Rohingya என்ற சொல்லை பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. மற்றைய நாடுகள் இந்த சொல்லை பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு பர்மா கேட்டுள்ளது.
.
கடந்த காலங்களில் பாப்பாண்டவர் Rohingya என்ற சொல்லை பலமுறை பயன்படுத்தி உள்ளார். ஆனால் பர்மாவுக்கான பயணத்தின் போது அச்சொல்லை பயன்படுத்துவதை தவிர்ப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
.
தனது பயணத்தின்போது பாப்பாண்டவர் Aung San Su Kyi உட்பட பலரையும் சந்திப்பார்.
.
பர்மாவின் Rohingya மீதான தாக்குதல்கள் காரணமாக சுமார் 600,000 Rohingya பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர்.
.
அண்மையில் ஐ.நா. தனது அறிக்கையில் பர்மாவின் Rohingya மீதான தாக்குதல்களை ethnic cleansing க்கு சிறந்த உதாரணம் என்றுள்ளது.

.