பாலஸ்தீனமும் ரம்பை பயமுறுத்தியதா?

Palestine

நேற்று வெள்ளிக்கிழமை பாலஸ்தீனர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் (Trump) அரசு முன்னுக்கு பின் முரணான நடவடிக்கை ஒன்றை (U-turn) எடுத்துள்ளது. அதற்கு காரணம் தற்போது எல்லாவற்றையும் இழந்த பாலஸ்தீனம் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட முனைந்ததா என்று வினாவ வைத்துள்ளது.
.
கடந்த கிழமை அமெரிக்காவின் தலைநகர் Washington DC யில் செயல்பட்டுவந்த பலஸ்தீனர்களின் அலுவலகத்தை மூடிவிடுமாறு ரம்ப் அரசு கட்டளை பிறப்பித்து இருந்தது. இஸ்ரவேலுக்கு எதிராக ஐ.நா. உட்பட எந்தவொரு சர்வதேச அமைப்புகளுடனும் பாலத்தீனம் இணைந்து செயல்படக்கூடாது என்பது இஸ்ரவேலினதும், அமெரிக்காவினதும் கட்டளை. அந்த கட்டளையை மீறி பாலஸ்தீனம் International Criminal Court (ICC) அமைப்புடன் இணைந்து இஸ்ரவேலின் நடவடிக்கைகளை விசாரணை செய்ய முயன்றமையே அமெரிக்காவின் இந்த தண்டனைக்கு காரணம்.
.
இழப்பதற்கு எதுவும் இல்லாத நிலையில், தமது அமெரிக்க அலுவலகத்தை மூடினால் தாம் அமெரிக்காவுடனான எல்லாவகை தொடர்புகளையும் முற்றாக நிறுத்தப்போவதாக பாலஸ்தீனம் கூறியது. இந்நிலையிலேயே ரம்ப் அரசு தமது முடிவை மாற்றிக்கொண்டது.
.
ரம்ப் அரசின் புதிய அறிவிப்பு பாலஸ்தீனர் தமது அலுவலகத்தை மேலும் 3 மாதங்களுக்கு இயக்கலாம் என்றும், 3 மாதங்களின் பின் அவலுவலகம் தொடர்ந்தும் செயல்படலாமா என்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் கூறுகிறது.
.

பாலஸ்தீனர்களின் West Bank பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் Fatah அமைப்பும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் Hamas அமைப்பும் அண்மையில் கூட்டாக செயல்பட இணங்கி இருந்தமையும் இஸ்ரவேலுக்கு சவாலாக அமைத்திருந்தது. Hamas ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும், அதனுடன் PLO இணைந்து செயல்பட முடியாது என்றும் கூறின இஸ்ரவேலுக்கு, அமெரிக்காவும்.
.