பின்போட்ட அமெரிக்க-சீன வர்த்தக பேச்சு காலக்கெடு

US_China

மார்ச் 1 ஆம் திகதிக்கு முன் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் புதிய வர்த்தக இணக்கம் ஏற்படாவிடின் அமெரிக்கா சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% இறக்குமதி வரி அறவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் முன்னர் கூறியிருந்தார். அதன்படி சனிக்கிழமை 2 ஆம் திகதி முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா 25% இறக்குமதி வரி அறவிடவேண்டும்.
.
ஆனால் இன்று ரம்ப் தனது கூற்றில் மார்ச் 1ஆம் திகதி ஆக இருந்த காலக்கெடுவை பின்தள்ளி உள்ளதாக கூறியுள்ளார். இந்த காலக்கெடு எவ்வளவு காலத்தால் பின்தள்ளப்பட்டது என்று அவர் கூறவில்லை.
.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நலமே நடைபெறுவதாலேயே தான் காலக்கெடுவை பின்தள்ளியதாக ரம்ப் கூறியுள்ளார். இருபகுதிகளுக்கும் இடையில் ஒரு win-win இணக்கம் ஏற்பட்டால் தான் சீன ஜனாதிபதியை சந்தித்து உடன்படிக்கையில் ஒப்பம் இடவுள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
.
அத்துடன் வடகொரியாவின் தலைவர் கிம்முடனான (Kim) தனது சந்திப்புக்கு சீன ஜனாதிபதி நல்ல உதவிகளை செய்துள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார். கிம் சீனா மூலமே வியட்நாமை நோக்கி செல்கிறார்.

.