பிரான்ஸின் Macron கட்சிக்கு பெரும்பான்மை வெற்றி

Macron

இன்று பிரான்ஸில் இடம்பெற்ற தேர்தலில் அங்கு அண்மையில் ஜனாதிபதியாக வெற்றி கொண்ட Macron தலைமயிலான LERM என்ற கட்சி பெரும்பான்மை அரசை அமைக்க வேண்டிய ஆசனங்களை வெல்லும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது.
.
முந்திவரும் தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் 577 ஆசங்களை கொண்ட சட்ட சபைக்கு LERM கட்சி சுமார் 355 முதல் 425 ஆசங்களை பெறும் என்று கூறப்படுகிறது. பெரும்பான்மை அரசை அமைக்க குறைந்தது 289 ஆசனங்கள் தேவை.
.
இதுவரை எண்ணிமுடிக்கப்பட்ட 57% வாக்குகளில் 41% வாக்குகள் LERM கட்சிக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள Republican கட்சிக்கு 23% வாக்குகளும், மூன்றாம் இடத்தில் உள்ள National Front கட்சிக்கு 10% வாக்குகளும், இடதுடாரி கட்சிக்கு 6.2% வாக்குகளும் கிடைத்துள்ளன.
.

பிரான்ஸ் சட்டப்படி எவரும் 50% க்கும் மேலான வாக்குகளை பெறாவிடின், முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளோர்க்கு இடையில் மீண்டும் ஒரு தேர்தல் இடம்பெறும். இன்று ஞாயிறு இடம்பெற்ற தேர்தல் அவ்வகை இரண்டாம் சுற்று தேர்தலே.
.