சீனாவின் மிகப்பெரிய தூதரகம் ஒன்றை லண்டன் நகரில் அமைக்க இன்று செவ்வாய் பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 20,000 சதுர மீட்டர் பரப்பில் (215,000 சதுர அடி) அமையவுள்ள இது ஐரோப்பாவில் மிகப்பெரிய சீன தூதரகமாக இருக்கும்.
இந்த தூதரகம் அமைய உள்ள இடம் பெரும் சர்ச்சையை தூண்டியுள்ளது. இந்த தூதரகம் பிரித்தானியாவின் பிரபல Tower Bridge குக்கு அண்மையில் அமையவுள்ளது.
இந்த இடம் லண்டன் Financial District க்கு அண்மையில் உள்ளது மட்டுமன்றி, லண்டன் நகரின் பிரதான internet cable கள் இவ்வழியாகவே செல்கின்றன.

Royal Mint Court என்ற நிலையத்தை சீனா 2018ம் ஆண்டு $312 மில்லியன் வழங்கி கொள்வனவு செய்திருந்தது. ஆனாலும் எதிர்ப்புகள் காரணமாக இவ்விடத்தில் சீன தூதரகம் அமைக்கும் அனுமதி இன்று வரை வழங்கப்படவில்லை.
பிரித்தானியாவின் இந்த மன மாற்றத்திற்கு மூன்று பிரதான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: 1) ரம்பின் நடவடிக்கைகளால் அமெரிக்காவுடனான பொருளாதாரம் இடரில் உள்ளமை, 2) சீனாவின் முதலீடுகளை பிரித்தானியா நாடுவது, 3) பிரித்தானியாவின் பெய்ஜிங் தூதரகத்தை புதுப்பிக்க அனுமதி பெறுவது.
