பிரித்தானிய யுத்த விமானிகளை IPKF இலங்கையில் பயன்படுத்தியது?

IPKF

1987 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவும், இலங்கை சனாதிபதி ஜே. ஆரும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை செய்தபின் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கையின் யுத்த விமானங்களை செலுத்திய பிரித்தானிய (mercenary) யுத்த விமானிகள் IPKF படைகளுக்கு உதவியதாக புதிய வெளியீடு ஒன்று கூறுகிறது. இந்தியா பகிரங்கத்தில் இவ்வாறு பிரித்தானியர்களை பயன்படுவதை மறுத்து இருந்தாலும், களத்தில் இரகசியமாக பிரித்தானிய யுத்த விமானிகளை IPKF பயன்படுத்தி உள்ளது.
.
பிரித்தானியாவை தளமாக கொண்ட Phil Miller என்ற விசாரணை பத்திரிகையாளரே “Keenie Meenie: The British Mercenaries Who Got Away With War Crimes” என்ற புத்தகத்தில் இந்த உண்மைகளை வெளியிட்டு உள்ளார்.
.
IPKF படைகளுக்கான பிரித்தானிய யுத்த விமானிகளின் உதவி இலங்கையில் சுமார் 4 மாதகாலம் நீடித்ததாக கூறப்படுகிறது.
.
Keenie Meenie என்ற பதம் இரகசிய நடவடிககைகள் என்ற கருத்துப்பட அரபிய மொழியில்  கூறுவதாகும். இலங்கையில் இவர்களின் இரகசிய சேவை Keenie Meenie Service (KMS) என்று அழைக்கப்பட்டு இருந்தது.
.
IPKF வருவதற்கு முன்னரே Jim Johnson என்ற முன்னாள் பிரித்தானிய SAS (Special Air Service) யுத்த விமானி உட்பட சில பிரித்தானிய விமானிகளை இலங்கை அரசு பயன்படுத்தி வந்துள்ளது. அவர்களே தொடர்ந்தும் IPKFக்கு உதவி வழங்கி உள்ளனர்.
.
1987 ஆம் ஆண்டுக்கு முன் இலங்கைக்கு பிரித்தானிய இராணுவ உதவிகளை வழங்குவதை இந்திய எதிர்த்து இருந்தது. அந்த செய்தியை கோபாலசாமி பார்த்தசாரதி பிரித்தானியாவின் Anthony Acland என்பவருக்கு கூறி இருந்தார். அப்போது இந்தியா புலிகளின் பக்கம். அதனாலேயே இலங்கை KMS சேவையை இரகசியமாக பயன்படுத்தியது.
.
1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி வரை பிரித்தானியா IPKF க்கு உதவியதாக இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரக telegram ஒன்று கூறுகிறது.
.