பிரித்தானிய வைத்தியசாலைகள் மீது Internet தாக்குதல்

CyberAttack

இன்று வெள்ளிக்கிழமை London, Derbyshire, Merseyside உட்பட பல பிரித்தானிய நகர NHS வைத்தியசாலைகள் மீது Internet தாக்குதல் (cyber attack) இடம்பெற்று உள்ளது. இதனால் அந்த வைத்தியசாலைகள் தமது கணனிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவேண்டி இருந்துள்ளது.
.
National Health Service (NHS) மீதான இந்த தாக்குதல் காரணமாக வைத்தியர்கள் நோயாளிகளின் விபரங்களை பெறமுடியாமையால், முறைப்படி சேவையாற்ற முடியாமல் திண்டாடினார். அவசர சேவை தேவைப்படாத (non-emergency) நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
.
வைத்தியசாலைகள் இவ்வாறான பணய தாக்குதல்களுக்கு (ransomware) உள்ளாவது ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பலதடவைகள் இடம்பெற்று உள்ளன. பல தடவைகள் தாக்குதல்காரர் பணமும் பெற்றுள்ளார்.
.

தாக்குதல்காரர் வைத்தியசாலைகளின் கணனிகளில் உள்ள ஆவணங்களை தமது ransomware மூலம் களவாக encrypt செய்து விடுவார்கள். பின் அந்த வைத்தியசாலையிடம் ஒரு தொகை பணம் தந்தால் encryption செய்யப்பட்ட ஆவணங்களை decryption செய்ய தேவையான keyயை தருவதாக கூறுவார்கள். ஆவணங்களை மீண்டும் decryption செய்யாத வரையில் வைத்தியர்கள் அவற்றை பயன்படுத்த முடியாது.
.