பிறப்பு குடியுரிமையிலும் குறிவைக்கிறார் ரம்ப்

USFlag

உலகில் உள்ள 174 நாடுகளில், குறைந்தது 36 நாடுகள் பிறப்பு மூலமான குடியுரிமையை (citizenship) வழங்குகின்றன. அதாவது இந்த நாடுகளில் பிறக்கும் குழந்தை ஒன்று, அக்குழந்தையின் பெற்றார் அந்நாட்டு குடியுரிமை அற்றவர்கள் ஆகினும், அந்த நாட்டு குடியுரிமையை பெறுகிறது. அந்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. ஆனால் அந்த முறையை மாற்றி அமைக்க முனைகிறார் ரம்ப்.
.
அமெரிக்கா ஒரு செல்வந்த நாடாக இருப்பதால், மற்றைய நாட்டவர் இந்த சட்டத்தை தம் நலன்களுக்காக பயன்படுத்துவதும் உண்டு. சிலர் படிப்புக்கான விசா, உல்லாச பயண விசா போன்ற விசாக்களை பெற்று அமெரிக்கா சென்று அங்கு குழந்தையை பிரசவித்து, பின் தமது நாடுகளுக்கு திரும்புவதும் உண்டு. அக்குழந்தை வளரும்போது அமெரிக்க குடியுரிமையும் அந்த பிள்ளையின் கையில் இருக்கும்.
.
கனடா, மெக்ஸிக்கோ போன்ற பல நாடுகள் தற்போதும் பிறப்பு குடியுரிமையை வழங்கி வருகிறது.
.
இந்தியாவும் ஆதியில் இவ்வகை சட்டத்தை கொண்டிருந்தாலும், 1987 ஆம் ஆண்டு முதல் இவ்வகை குடியுரிமை வழங்கலை குறைத்து, 2004 ஆம் ஆண்டில் முற்றாக நிறுத்தி விட்டது. பங்களாதேசத்தில் இருந்து அதிகம் மக்கள் இந்தியா வருவதை தடுக்கவே இந்தியா இந்த மாற்றத்தை நடைமுறை செய்தது.
.
பிரித்தானியாவும் அங்கிருந்த இவ்வகை சட்டத்தை 1983 ஆம் ஆண்டில் நிறுத்தி விட்டது. அங்கு தற்போது குறைந்தது ஒரு பெற்றார் பிரித்தானிய குடியிருப்பாளர் (resident) ஆக இருத்தல் வேண்டும் என்று சட்டத்தை மாற்றி உள்ளது.
.