புதன் முதல் கனடாவும் உள்வரவை மூடுகிறது

Coronavirus

பரவிவரும் கொரோனா காரணமாக புதன்கிழமை (மார்ச் 18) முதல் அந்நிய நாட்டவர் கனடாவுள் நுழைவது தடை செய்யப்படவுள்ளது. இந்த அறிவிப்பை பிரதமர் இன்று கூறியுள்ளார்.
.
கடனடிய குடிமக்கள், நிரந்தர வதிவிட உரிமை கொண்டோர் தொடர்ந்தும் உள்வர அனுமதிக்கப்படுவர். அத்துடன் அமெரிக்க குடிமக்களும் கனடாவுள் செல்ல தற்போதைக்கு அனுமதிக்கப்படுவர்.
.
புதன்கிழமை முதல் Toronto, Montreal, Calgary, Vancouver ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் தரையிறக்கப்படும். இந்த விமான நிலையங்களில் பயணிகளை பரிசோதனை செய்ய வசதிகள் செய்யப்படும்.
.
British Columbia மாநிலத்தில், வன்கூவருக்கு வடக்கே உள்ள Lynn Valley Care Centre என்ற முதியோர் இடத்தில் இன்று 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஏற்கனவே இங்கு பலியாகியவருடன் மொத்தம் 4 பேர் கனடாவில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
.
அத்துடன் சுமார் 325 பேர் கனடாவில் கொரோனாவின் தொற்றுக்கு உள்ளாகியும் உள்ளனர்.
.