புதிதாக தோன்றிவரும் Snoopy தீவு

SnoopyIsland

ஜப்பானின் தெற்கே சும்மார் 1000 km தூரத்தில் புதிதாக ஒரு தீவு தோன்றிவருகிறது. எரிமலை (Volcanic) நிகழ்வுகள் அதிகம் காணப்படும் ஜப்பானுக்கும் தெற்கே உள்ள Bonin தீவுகள் பகுதியிலேயே இந்த புதிய தீவு தோன்றுகிறது. இந்த புதிய தீவுக்கு Niijima தீவு என்று பெயரிடப்பட்டாலும் இந்த புதிய தீவு ஏற்கனவே தோன்றியுள்ள Nishino-shima தீவுக்கு அண்மையில் தோன்றி, இரண்டு தீவுகளும் சேர்ந்து Snoopy என்ற பிரபல cartoon நாய்க்குட்டியை ஒத்துள்ளதால் பலரும் இதை Snoopy தீவு என அழைக்கின்றனர்.

அது மட்டுமன்றி இந்த புதிய மன்றும் பழைய தீவுகளுக்கு இடையே சிவப்பு நிற கடல் நீர் இருப்பதால் இது Snoopy என்ற நாய்க்குட்டியின் கழுத்துபட்டி போல் உள்ளது.

இந்த எரிமலை நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெறுவதால் இதன் Snoopy வடிவம் சிலவேளைகளில் மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களில் இந்த தீவு சுமார் 8 மடங்கால் பெருத்துள்ளது. ஆனால் சிலவேளைகளில் இது மீண்டும் அழிந்து கடல் மட்டத்தின் கீழேயும் போகலாம்.

இதற்கு முன் இந்தப்பகுதுயில் 1974 ஆம் ஆண்டிலேயே எரிமலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.