பூட்டினின் நண்பர் Roman பில்லியன் கொள்ளை

பூட்டினின் நண்பர் Roman பில்லியன் கொள்ளை

ரஷ்ய சனாதிபதி பூட்டினின் நண்பரான Roman Abramovich சட்டவிரோத முறையில் பல பில்லியன் ரஷ்ய மக்கள் பணத்தை சூறையாடி உள்ளார் என்கிறது Panorama அமைப்பு.

1995ம் ஆண்டு ரஷ்ய அரசுக்கு சொந்தமான Sibneft என்ற எண்ணெய் நிறுவனத்தை Roman, பொய் ஏலம் மூலம், $250 மில்லியனுக்கு ($0.250 பில்லியன்) கொள்வனவு செய்திருந்தார். பின்னர் இதை 2005ம் $13 பில்லியனுக்கு மீண்டும் ரஷ்ய அரசுக்கு விற்பனை செய்திருந்தார்.

தற்போது யுக்கிரைனில் இடம்பெறும் யுத்தம் காரணமாக Roman மீதும் மேற்கு நாடுகளால் தடை விதிக்கப்படு உள்ளது.

இவரே பிரித்தானியாவின் The Chelsea என்ற விளையாட்டு அமைப்பின் உரிமையாளர்.

பூட்டின் மட்டுமன்றி, முன்னாள் ரஷ்ய சனாதிபதி Boris Yeltsin னும் Roman னை பாதுகாத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Slavneft என்ற ரஷ்யாவின் இன்னோர் எண்ணெய் நிறுவனமும், பொய் ஏலம் மூலம், Roman வால் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு இருந்தது. அந்த நிறுவன கொள்வனவுக்கு இவர் வழங்கிய பெறுமதியின் இரண்டு மடங்கை சீன நிறுவனமான CNPC வழங்க இருந்தும், மாஸ்கோ சென்ற அந்த அதிகாரிகளை கடத்தி, அவர்கள் ஏலத்தில் பங்கு கொள்வதை தடுத்து இருந்தனர்.