தான் யூக்கிறேன் யுத்தத்தை நிறுத்தினேன் என்ற பெருமையை அடைய, ஆனால் ரஷ்ய சனாதிபதி பூட்டினை கட்டுப்படுத்த முடியாத அமெரிக்க சனாதிபதி ரம்ப் தனது 28-point திட்டம் மூலம் பூட்டின் விரும்பிய எல்லாவற்றையும் வழங்க யூக்கிறேனை நெருக்கிறார்.
ரம்பின் திட்டத்தை பூட்டினின் wishlist என்று ரம்பின் செயலாளர் Marco Rubio அழைத்ததாக அமெரிக்க செனட்டர்கள் கூறியுள்ளனர். பின்னர் Rubio அக்கூற்றை மறுத்து இருந்தார். அமெரிக்க Maine மாநில செனட்டர் Angus King உம் இந்த திட்டத்தை “wish list of the Russians” என்று அழைத்துள்ளார்.
இந்த திட்டம் பகிரங்கம் செய்யப்படவில்லை என்றாலும் கசிந்த விபரங்கள் ரஷ்யா கைப்பற்றி உள்ள Crimea உட்பட அனைத்து இடங்களையும் யூக்கிறேன் ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிறது. அத்துடன் ரஷ்யா தொடர்ந்தும் யூக்கிறேனை ஆக்கிரமித்தால் அமெரிக்கா என்ன செய்யும் என்று கூறப்படவில்லை.
தனது திட்டத்தை யூக்கிறேன் மறுத்தால் அமெரிக்கா யூக்கிறேனுக்கு வழங்கும் ஆயுத, உளவு உதவிகள் அனைத்தையும் நிறுத்தவுள்ளதாகவும் ரம்ப் மிரட்டி உள்ளார். ரம்பின் இந்த மிரட்டலை NATO நாடுகள் விரும்பவில்லை என்றாலும் வலுவற்ற அவர்களால் எதுவும் செய்ய முடியாது. NATO நாடுகள் ரம்பின் திட்டத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கின்றன.
ஐரோப்பிய நாடுகள் யூக்கிறேனுக்கு இதுவரை $40 பில்லியன் ஆயுத உதவிகளை வழங்கி இருக்க, அமெரிக்கா $35 பில்லியன் உதவிகளையே வழங்கி உள்ளது. Prioritised Ukraine Requirements List என்ற தற்போதைய திட்டம் மேலும் $90 பில்லியன் ஐரோப்பிய நாடுகளின் பணத்துக்கு அமெரிக்கா Patriot ஏவுகணை, NASAMS போன்ற ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளது. ஆனால் ரம்ப் அந்த திட்டத்தை கைவிடலாம்.
இலங்கை தமிழர் இந்தியாவை நம்பி யுத்தம் ஒன்றை ஆரம்பித்து பின் இந்தியா கைவிட உடுத்து இருந்ததையும் இழந்ததுபோல் யூக்கிறேனின் நிலைமையும் அமையும்.
