பூட்டினை கட்டுப்படுத்த சீயின் உதவியை நாடும் பைடென்

பூட்டினை கட்டுப்படுத்த சீயின் உதவியை நாடும் பைடென்

பூட்டினின் யுகிரைன் மீதான யுத்தத்தை கட்டுப்படுத்த சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்கா. இன்று வியாழன் வெள்ளைமாளிகை தெரிவித்த கூற்றுப்படி பைடென் நாளை வெள்ளிக்கிழமை சீனாவின் சனாதிபதி சீயுடன் இது தொடர்பாக உரையாடவுள்ளார்.

யுகிரைன் மீதான யுத்தம் காரணமாக ரஷ்யாவை பொருளாதார வழிகளில் தண்டிக்கின்றன அமெரிக்காவும் மேற்கும். அந்த தண்டனைகளில் இருந்து தப்ப பொருளாதாரத்தில் பலமான சீனாவின் உதவியை நாடுகிறது ரஷ்யா. அதையே தடுக்க முனைகிறார் பைடென்.

அத்துடன் சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதையும் தடுக்க முனைகிறது அமெரிக்கா. அமெரிக்காவின் கீழ் நிலை அதிகாரிகள் இந்த முயற்சியில் தோல்வியுற்றதாலேயே பைடென் நேரடியாக சீயுடன் தொடர்பு கொள்கிறார்.

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan சீனாவின் திங்கள்கிழமை Yang Jiechi யுடன் செய்தகொண்ட 7 மணிநேர பேச்சுக்கள் தோல்வியில் முடிந்துள்ளன.

ரஷ்யா மட்டுமன்றி சீனாவும் நேட்டோ கிழக்கு நோக்கி பரவுவதை எதிர்க்கிறது. அத்துடன் மேற்கின் நன்மைக்காக ரஷ்யாவின் உறவை கைவிட சீனா விரும்பாது.