பேர்லின் மரதனை வென்று Kipchoge உலகசாதனை

EliudKipchoge

இன்று இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான பேர்லின் மரதன் (Berlin Marathon, Germany) ஓட்டத்தை கென்யா நாட்டு வீரரான, 33 வயதுடைய, Eliud Kipchoge வென்றுள்ளார். இவர் 42.195 km (26 மைல், 385 யார்) தூரத்தை 2 மணித்தியாலம், 1 நிமிடம், 39 செக்கன் நேரத்தில் (2:01:39) கடந்துள்ளார். இவரின் இன்றைய வெற்றி புதிய உலக சாதனையாகவும் (world record) அமைந்துள்ளது.
.
2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மரதன் உலக சாதனையை, 2:02:57 நேரத்தில் ஓடியதன் மூலம், கென்யா நாட்டின் Dennis Kimetto கொண்டிருந்தார்.
.
கடந்த வருடம் Eliud Kipchoge இந்த ஓட்டத்தை 2:02:57 நேரத்தில் கடந்திருந்தார்.
.
​இந்த வருடம் 39,101 பேர் பேர்லின் மரதன் ஓட்டத்தை முழுமையாக ஓடி முடித்திருந்தனர். அதில் 28,067 பேர் ஆண்கள், 11,034 பேர் பெண்கள். 1974 ஆம் ஆண்டில், இந்த மரதன் ஆரம்பிக்கப்பட்ட வருடம், மொத்தம் 244 பேர் மட்டுமே முழுமையாக ஓடி முடித்திருந்தனர். அதில் 234 பேர் ஆணைகள், 10 பேர் பெண்கள்.
.
​கடந்த 20 வருடங்களில், கென்யா நாட்டவர் 15 தடவைகளும், எதியோப்பியா நாட்டவர் 5 தடவைகளும் பேர்லின் மரதனை வென்றுள்ளனர்.
.