போதை கடத்திய சவுதி இளவரசர் கைது

PrinceDrug

Abdul Mohsen bin Walid bin Abdul Aziz al-Saud என்ற சவுதி இளவரசர் உட்பட 10 நபர்கள் மீது லெபனான் அரசு இன்று திங்கள் போதை கடத்திய குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளது. இவர்களில் 5 பேர் தற்போது தலைமறைவாக உள்ளனர்.
.
கடந்த மாதம் 25 ஆம் திகதி இளவரசரும் அவரது கூட்டும் லெபானின் பெய்ரூத் நகரில் இருந்து சவுதிக்கு விமான மூலம் 40 பொதிகளில் இந்த போதையை கடத்த முனைந்துள்ளனர். இதன் பெறுமதி சுமார் $293 மில்லியன் ($293,000,000) ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
.
இந்த போதை பொருட்களுக்கும் சிரியாவில் நடைபெறும் யுத்தத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த ஐ.நா. அறிக்கை ஒன்றின்படி உலக அளவில் இந்த வகை போதைகளின் 55% சவுதி, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளில் பாவனை செய்யப்பட்டதாக கூறப்பட்டு இருந்தது.
.
இளவரசரிடம் 40 பொதிகள் இருந்தமையால், விமான நிலைய அதிகாரிகள் அவற்றை X-Ray ஊடு செலுத்த விரும்பினர். அனால் அதை விரும்பாத இளவரசர் தம்மிடம் இராஜதந்திர கடவுச்சீட்டு இருபதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் உமக்குத்தான் இராஜதந்திர கடவுச்சீட்டு, பொதிகளுக்கு அல்ல என்று கூறி சோதனை செய்துள்ளனர். அப்போதே இப்போதை அகப்பட்டது.
.
வறுமைப்பட்ட நாடுகளில் இருந்து வந்து சவுதியில் வேலை செய்வோர் செய்யும் சிறு குற்றங்களுக்கே தலையை துண்டித்தல், கையை வெட்டுதல் போன்ற தண்டனைகளை வழங்கும் சவுதி இந்த இளவரசரை எவ்வாறு தண்டிக்கும்?

.