போர்க்களம் ஆனது மியன்மார், இன்று 114 பேர் பலி

போர்க்களம் ஆனது மியன்மார், இன்று 114 பேர் பலி

கடந்த பெப்ருவரி 1ம் திகதி முதல் மியன்மாரில் இராணுவ கவிழ்ப்பு மூலம் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு இன்று சனிக்கிழமை மட்டும் குறைந்தது 114 பேர் பலியாகி உள்ளனர்.

இன்று சுட்டு கொலை செய்யப்பட்டோருள் 13 வயது சிறுமி ஒருத்தியும் அடங்குவர்.

பெப்ருவரி 1ம் திகதி முதல் இன்று வரை சுமார் 400 பேர் அங்கு பலியாகி உள்ளனர். அத்துடன் அங் சன் சு கீ உட்பட சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

அதேவேலை மியன்மாரின் கிழக்கே சுயாதீனமாக இயங்கும் Karen National Union என்ற Karen மக்களை கொண்ட இராணுவம் மீதும் தாக்குதல்கள் இடம்பெறுள்ள உள்ளன என்று KNU கூறியுள்ளது. அதற்கு முன்னர் KNU படைகள் தாய்லாந்து எல்லையில் இருந்த மத்திய அரசின் படைகளை விரட்டியதாக கூறப்படுகிறது.