மக்களை ஏமாற்ற Rs 251 Smartphone?

Freedom251

சில நாட்களின் முன் இந்திய நிறுவனமான Ringing Bell தாம் தயாரித்த smartphoneகளை இந்திய ரூபா 251 க்கு (சுமார் U$ 4.00) விற்பனை செய்யவுள்ளதாக கூறியிருந்தது. அதற்கு Freedom 251 என்றும் பெயரிட்டிருந்தது. அந்த smartphoneகளை கொள்வனவு செய்ய விரும்புவோர் முன்கூட்டியே பணத்தை செலுத்தி தமது கொள்வனவை உறுதிப்படுத்தவும் வழி செய்திருந்தது. அதன்படி பல்லாயிரம் மக்கள் கொள்வனவுக்கான பணத்தை செலுத்தியும் இருந்தனர். இந்த திட்டம் இதுவரை ரூபா 75 லட்சம் முதல் 1.66 கோடிவரை பணம் சேகரித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
ஆனால் இந்த மலிவு விலை smartphone திட்டம் ஒரு பணம் திருடும் திட்டம் (Ponzi scam) என்று இப்போ தெரியவந்துள்ளது. எவ்வாறு ஒரு smartphone ஒரு புரியாணி பொதியையும் விட மலிவாக விற்கப்படலாம் என்கிறனர் பலர். இந்த விவகாரத்தை இந்திய அரசு இப்போது விசாரணி செய்கிறது.
.
விசாரணைகள் ஆரம்பமாகியதை தொடர்ந்து Ringing Bell நிறுவன CEO Mohit Goel தாம் சேகரித்த பணத்தை திருப்பி வழங்கவுள்ளதாக கூறியுள்ளார்.
.
இவ்வகை smartphone ஒன்றை தயாரிக்க மட்டும் சுமார் Rs 2,500 செலவாகும் என அத்துறையில் உள்ளோர் கூறியுள்ளனர்..
.
Freedom 251னினது விளம்பரத்துக்கூட Adcom என்ற பிறிதொரு நிறுவனத்தின் smartphone ஒன்றை, அதன் உண்மையான Adcom அடையாளங்களை மறைத்துவிட்டு, Ringing Bell பாவித்திருந்தது.

.