மண்டேலா கட்சி இப்போ மாபியா கட்சி

SouthAfrica

அமெரிக்காவின் The New York Times தென்னாபிரிக்காவின் ANC கட்சி தொடர்பாக இன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நெல்சன் மண்டேலா உருவாக்கிய ANC (African National Congress) கட்சி உறுப்பினர் தற்போது ஊழல் நோக்கில் ஒருவரை ஒருவர் படுகொலை செய்வதாக கூறப்படுள்ளது.
.
2016 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை சுமார் 90 பேர் ANC உட்கட்சி போட்டிக்கு பலியாகி உள்ளனர் என்று கணித்துள்ளனர் University of Cape Town மற்றும் Global Initiative Against Transnational Crime ஆய்வாளர். குறிப்பாக ஊழல் செய்வோருக்கு எதிராக குரல் கொடுப்பவரே படுகொலை செய்யப்படுகிறார்கள்.
.
Thabiso Zulu என்ற ANC உறுப்பினர் மண்டேலா உருவாக்கிய கட்சி இப்போது மாபியா (Mafia) போல் செயல்படுகிறது என்று கூறியுள்ளார். ஆபத்து காரணமாக இவர் தற்போது மறைந்து வாழ்கிறார்.
.
அண்மையில் Sindiso Magaqa என்ற 34 வயதுடைய Umzimkhulu பகுதி மாநகரசபை உறுப்பினர் தனது காரில் இருக்கையில் சுட்டு கொல்லப்பட்டு இருந்தார். இவர் Umzimkhulu Memorial Hall திருத்த வேலைகளின் போது ஊழல் இடம்பெற்றதை பகிரங்கப்படுத்தி இருந்தார். இவருடன் இருவேறு நண்பர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
.
Pretoria என்ற இடத்தில் அரச வீட்டுத்திட்டம் ஒன்றில் இடம்பெற்ற ஊழலை பகிரங்கப்படுத்திய பெண் உறுப்பினர் அனைவரின் 3 பிள்ளைகள் முன்னிலையில் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். கால்பந்தாட்ட மைதானம் அமைக்கும் திட்டத்தில் இடம்பெற்ற ஊழலை பகிரங்கப்படுத்திய நகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரின் மகன் முன்னே சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
.
KwaZulu Natal மாகாணமே மிக ஆபத்தான மாகாணமாக உள்ளது. இங்கு 2011 முதல் 2017 வரையான காலத்தில் 80 ANC உறுப்பினர்கள் உட்கட்சி எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
.