மயன்மாரில் மீண்டும் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

மயன்மாரில் மீண்டும் இராணுவ ஆட்சி கவிழ்ப்பு?

மயன்மாரில் (பர்மா) இன்று திங்கள் காலை இடம்பெறும் நிகழ்வுகள் அங்கு மீண்டும் ஒரு இராணுவ ஆட்சி கவிழ்ப்பு இடம்பெறுகிறதா என்று கருத வைக்கிறது. அந்நாட்டின் தலைவி அங் சன் சு கியும் (Aung San Suu Kyi) பல ஆளும் கட்சி அமைச்சர்களும் இன்று திங்கள் காலை இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

National League for Democracy (NLD) என்ற ஆளும் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டு செய்தி நிறுவனங்களுக்கு மேற்படி தகவலை வழங்கி உள்ளார்.

தலைநகர் Naypyidaw வுக்கான தொலைபேசி மற்றும் intranet தொடர்புகள் தற்போது துண்டிக்கப்பட்டு உள்ளன. தொலைக்காட்சி மற்றும் ரேடியோ சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு உள்ளன.

2015ம் ஆண்டு அங் சன் சு கி தலைமையில் NLD ஆட்சிக்கு வந்திருந்தது. ஆனாலும் இராணுவம் கணிசமான பலத்தை தன்வசம் வைத்திருந்தது. பல பிரதான அமைச்சர் பதவிகளும், 25% ஆசனங்களும் இராணுவத்துக்கு உரியன.

கடந்த நவம்பர் அங்கு இடம்பெற்ற இரண்டாவது தேர்தலில் NLD மீண்டும் வெற்றியை அடைந்து இருந்தது. ஆனால் இராணுவம் முடிவுகளை விரும்பவில்லை. இந்த மாதம் 29ம் திகதி அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட 16 நாடுகள் மயன்மார் இராணுவத்திடம் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுமாறு கூறி இருந்தன.