மாலைதீவை இழந்த இந்தியா மினிக்காய் தீவில் கடற்படை தளம்

மாலைதீவை இழந்த இந்தியா மினிக்காய் தீவில் கடற்படை தளம்

மாலைதீவில் தான் கொண்டிருந்த கடற்படை தளத்தை சீனாவுக்கு இழந்த இந்தியா தனது சொந்த தீவான மினிக்காய் தீவில் கடற்படை தளம் ஒன்றை அமைக்கிறது. மினிக்காய் தீவு மாலைதீவில் இருந்து 500  km தூரம் வடக்கே உள்ளது.

INS Jatayu என்ற இந்த கடற்படை தளம் மார்ச் மாதம் 6ம் திகதி ஆரம்பிக்கப்படும். ஆரம்ப விழாவில் சுமார் 15 இந்திய யுத்த கப்பல்கள் பங்குகொள்ளும்.

இந்த தளம் இந்து சமுத்திரத்தை கண்காணிக்க உதவும். 

ஆனாலும் இந்து சமுத்திரம் ஊடான கப்பல் போக்குவரத்தில் மாலைதீவே பிரதான நிலையத்தில் உள்ளது.