மின் உற்பத்திக்கு 3 தினங்களுக்கே Diesel உண்டு

மின் உற்பத்திக்கு 3 தினங்களுக்கே Diesel உண்டு

இலங்கையில் Diesel மூலமான மின் உற்பத்தி பயன்பாட்டுக்கு 3 தினங்களுக்கு போதுமான diesel எரிபொருளே உண்டு என்று கூறப்படுகிறது. அதனால் நாட்டில் மின்வெட்டு தொடரும் என்று நம்பப்படுகிறது.

கொழும்புக்கு வடக்கே உள்ள Kelanitissa Power plant, Mathugama, Kolonnawa, Thulhiriya ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்தி செய்யாது உள்ளன. அதனால் மொத்தம் 363 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டு உள்ளது.

சிறு தொகை மேலதிக diesel பெப்ரவரி 20ம் திகதி வரவுள்ளது என்றும் எரிபொருள் அமைச்சு கூறியுள்ளது.

ஆனால் இந்தியா வழங்கும் $500 மில்லியன் கடன் மூலம் கிடைக்கும் diesel ஏப்ரல் மாதமே இலங்கைக்கு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள்களுக்காக இலங்கை $250 மில்லியன் பணத்தை சிங்கப்பூர், UAE ஆகிய நாடுகளுக்கு செலுத்த உள்ளது.

நேற்று வியாழக்கிழமை 17ம் திகதி மொத்தம் 2,639 மெகாவாட் மின் தேவைப்பட்டதாகவும் அதில் 56.8% மின் diesel மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், மிகுதி 43.2% மின் நீர், காற்று, சூரிய சக்தி ஆகியன மூலம் உற்பத்தி செய்யப்படத்தவும் கூறப்படுகிறது.

ஜனவரி மாதம் இலங்கை $2.36 பில்லியன் அந்நியசெலவானையை மட்டுமே கொண்டிருந்தது.