மீண்டும் அமெரிக்காவின் Second Fleet

SecondFleet

அதிகரித்துவரும் ரஷ்யாவின் கடற்படை நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்கா மீண்டும் தனது Second Fleet என்ற கடற்படை அணியை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. இந்த செய்தி கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க கடற்படையால் வெளியிடப்பட்டுள்ளது.
.
இரண்டாம் உலகயுத்தம் முடிந்த பின், Cold War காலத்தில், Second Task Fleet என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமெரிக்க கடற்படை அணி, 1950 ஆம் ஆண்டு முதல் Second Fleet என்று அழைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில், Cold War தணிந்த காரணத்தாலும் கடற்படையின் செலவை குறைக்கும் நோக்கிலும், இந்த அணி கலைக்கப்பட்டு இருந்தது. இந்த அணியில் இருந்த படையினரும், கப்பல்களும் வேறு அணிகளுக்கு நகர்த்தப்பட்டனர்.
.
2011 ஆம் ஆண்டு இந்த அணி கலைக்கப்பட முன்னர் இந்த அணியிடம் 126 கப்பல்கள், 4,500 யுத்த விமானங்கள், 90,000 படையினர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த அணி 17 மில்லியன் சதுர km கடல்பரப்பை காவல் செய்திருந்தது.
.
சீனாவின் இராணுவ வளர்ச்சி காரணமாக ஒபாமா அரசு அமெரிக்காவின் கடற்படையின் பெரும் பகுதியை ஆசிய கடல்களுக்கு அனுப்பி இருந்தது. அதனால் அத்திலாந்திக் கடலில் அமெரிக்காவின் செயல்பட்டுகள் குறைந்து இருந்தது.
.

புதிய Second Fleet அணிக்கான படைகளினதும், கப்பல்களினதும் தொகை அறிவிக்கப்படவில்லை.
.