மீண்டும் பூட்டின், மேற்குக்கு தலையிடி, சீனாவுக்கு நயம்

மீண்டும் பூட்டின், மேற்குக்கு தலையிடி, சீனாவுக்கு நயம்

பலமான அரசியல் போட்டிகளை நசுக்கி விரட்டிய பின் ரஷ்யா நிகழ்த்திய தேர்தலில் பூட்டின் 87% வாக்குகள் பெற்று மீண்டும் 6 ஆண்டுகளுக்கு சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இம்முறையுடன் பூட்டின் 5 தடவை ஆட்சிக்கு வந்த சனாதிபதி ஆகிறார்.

அதனால் அமெரிக்கா உட்பட மேற்குக்கு மேலும் 6 ஆண்டுகள் தலையிடி நிறைந்த, யுத்த செலவுகள் அதிகரித்த காலமாக அமையும். நவம்பரில் இடம்பெறவுள்ள அமெரிக்க தேர்தலில் ரம்ப் வெற்றி பெற்றால் ஐரோப்பிய நாடுகளுக்கு, குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு பெரும் இடராக அமையும்.

பூட்டின் மீதான தடைகள் மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆகையால் அது சீனாவுக்கு பெரும் நன்மையை அளிக்கும். மேற்கின் தடைகள் காரணமாக ரஷ்யா சீன உற்பத்திகளிலும், சீனா ஊடான உலக பொருளாதாரத்திலும் தங்கி உள்ளது.

இந்த தேர்தலை மேற்கு நாடுகளின் தலைவர்கள் ஒரு போலி தேர்தல் என்று சாடியுள்ளனர். ஆனால் இவர்கள் எகிப்து போன்ற நாடுகளில் இவ்வகை போலி தேர்தல்கள் மூலம் ஆட்சியை கைப்பற்றுவோருடன் தமது நலனுக்காக ஒட்டி உறவாடுகின்றனர்.