முதல்வர் ஜெயலலிதா மரணம்

Jaya

தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இன்று தனது 68 ஆவது வயதில் காலமானார். இவரின் மரணத்தை இன்று திங்கள் இரவு Apollo வைத்தியசாலை அறிவித்து உள்ளது. பொதுவாகவே அரசியல்வாதிகளின் குடும்பத்தில் பிறந்து அரசியலுக்கு வந்த பெண்களை போல் அல்லது, இவர் சுயமாக அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆனார்.
.
 1960 ஆம் ஆண்டுமுதல் இவர் 140 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். சுமார் 20 வருடங்கள் சினிமாவில் இருந்த இவர், பின்னர் 1982 ஆம் ஆண்டில் அண்னா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் கொள்கை பரப்பு செயலாரராக MGR ஆல் நியமிக்கப்படார். 1987 ஆம் ஆண்டில், MGR மறைவின் பின். இவர் அக்கட்சி தொண்டர்களின் தலைவி ஆனார். 1991 ஆம் ஆண்டில் இவர் முதல் முறையாக தமிழ்நாடு முதல்வர் ஆனார்.
.
சுமார் 6,000 காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தும் முகமாக சென்னை நகரில் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
.
1997 ஆம் ஆண்டு இவரின் குடியிருப்பை சோதனையிட்ட போலீசார் 800 kg வெள்ளி, 28 kg தங்கம், 750 சோடி பாதணிகள், 10,000 சாறிகள் என்பவற்றை கைப்பற்றி இருந்தது.
.
இவரை உடல் Poes Gardenக்கு எடுத்து செல்லப்படும். தமிழ்நாடு அரசு 3 தினங்கள் துக்கம் கொண்டாட அறிவித்து உள்ளது.
.