முதல் 100 மாசடைந்த நகர்களில் 83 இந்தியாவில்

முதல் 100 மாசடைந்த நகர்களில் 83 இந்தியாவில்

உலக அளவில் அதிகம் மாசடைந்த 100 நகரங்களில் 83 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்கிறது IQAir என்ற அமைப்பு. அத்துடன் மேற்படி 100 நகர்களில் 99 நகர்கள் ஆசியாவில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி 1 மீட்டர் கனவளவு வளியில் 5 microgram க்கும் அதிகமான PM2.5 மாசு துகள்கள் இருந்தால் அந்த வளி சுவாசத்துக்கு ஆபத்தானது. ஆனால் மேற்படி 100 நகர்களில் உள்ள வளி 10 மடங்கு ஆபத்தானவை.

மொத்தம் 7,800 நகரங்களின் வளி மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன என்றும் அதில் 91% மாசானவை என்றும் கூறப்படுகிறது. இந்திய பீகார் மாநிலத்து Begusarai நகரில் 23 மடங்கு மாசான வளி இருந்துள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் சீனாவிலும் வளி மாசு அதிகமாக இருந்திருந்தாலும் சீன அரசின் கடுமையான சட்டங்கள் வளியை அங்கு பெருமளவில் தூய்மையாக்கி உள்ளன. அதனால் தற்போது சீனரின் சராசரி ஆயுள் 2.2 ஆண்டுகளால் அதிகரித்துஉள்ளதாம்.