முன்னர் NAFTA, இப்போ USMCA

NAFTA

கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைமுறையில் இருந்த NAFTA (North American Free Trade Agreement) என்ற வர்த்தக உடன்படிக்கை USMCA (United States, Mexico and Canada Agreement) என மாறுகிறது.
.
1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட NAFTA என்ற வர்த்தக உடன்படிக்கையை ரம்ப் குறை கூறி வந்திருந்தார். தான் ஜனாதிபதியா ஆகின NAFTAவை மாற்றி அமைக்கப்போவதாக கூறியும் வந்திருந்தார். அவர் ஆட்சிக்கு வந்தபின் NAFTA உடன்படிக்கையை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டார். சுமார் 14 மாத கால பேச்சுக்களின் பின், ஞாயிரு இரவு மூன்று நாடுகளும் புதியதோர் உடன்படிக்கைக்கு இணங்கி உள்ளன. ஆனால் விபரங்கள் முமையாக வெளிவரவில்லை.
.
இந்த உடன்படிக்கை கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய மூன்று அரச உறுப்பினர்களாலும் வரும் 3 மாத காலத்துள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதன் பின்னரே சட்டமாகும்.
.
அமெரிக்காவும், கனடாவும் பல விடயங்களில் விடாப்பிடியாக இருந்திருந்தாலும் பின்னர் சில விடயங்களில் தமது எதிர்ப்பை குறைத்து உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.
.
முழு விபரங்களும் வெளியிடப்படும்போதே கனடாவின் பிரதமர் றூடோ (Justin Trudeau) ரம்பிடம் அடிபணிந்தாரா என்பது தெரிவரும். அவ்விடயம் அவரின் அடுத்த தேர்தலை நிர்ணயிக்கும்.

.