முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபே மீது சூடு

முன்னாள் ஜப்பானிய பிரதமர் அபே மீது சூடு

முன்னாள் ஜப்பானிய பிரதமரான Shinzo Abe மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். துப்பாக்கி சூட்டின் பின் அபே நிலத்தில் வீழ்ந்து உள்ளார். தற்போது வைத்தியசாலையில் உள்ள அவரின் நிலை வெளியிடப்படவில்லை. சந்தேக நபர் காவலில் உள்ளார்.

Nara என்ற நகரில் அபே பேச்சு ஒன்றை நிகழ்த்தும் வேளையிலேயே சுடப்பட்டார். உள்ளூர் நேரடி வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூட்டுக்கு ஆளான பின்னரும் அபே நினைவுடன் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

அபே இரண்டு தடவைகள் பிரதமர் பதவியை கொண்டிருந்தவர். 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டுவரை தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர். அதற்கு முன்னர் 2006ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையும் இவர் பிரதமராக பதவி வகித்தவர்.

இவ்வகை அரசியல் வன்முறைகள் இடம்பெறுவது ஜப்பானில் மிக குறைவு.