முன்னாள் FBI Director மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு, சிப்பிகள் காரணம் 

முன்னாள் FBI Director மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு, சிப்பிகள் காரணம் 

முன்னாள் அமெரிக்க FBI Director James Comey மீது ரம்ப் அரசு சனாதிபதி மீது கொலை மிரட்டல் செய்தார் என்று வழக்கு ஒன்றை செவ்வாய் தாக்கல் செய்துள்ளது.

தனக்கு பிடிக்காதவர்களை தன் பதவியை பயன்படுத்தி பழிவாங்குவதில் சுகம் கொள்பவரான ரம்ப் Comey மீது தொடரும் இரண்டாவது வழக்கு இது. முதல் வழக்கு கடந்த ஆண்டு நீதிபதியால் வீசப்பட்டது.

இம்முறை Comey செய்த தவறு கடலோரம் “86 47” இருந்த சிப்பிகளை படம்பிடித்து தனது இணைய தளங்களில் பதிந்ததே. இங்கே 47 என்ற இலக்கம் 47வது சனாதிபதியை, அதாவது ரம்பை, குறிக்கிறது என்று வாதாடுகிறது அரச தரப்பு.

இதில் 86 என்ற இலக்கத்துக்கு பல பேச்சு வழக்கு அர்த்தங்கள் உண்டு. பலரும் அறிந்தது உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் ‘cancel’ அல்லது ‘remove’ என்பதே. அதாவது ஒரு order ஐ cancel செய், அல்லது ஒரு customer ஐ வெளியேற்று என்பதே.

பச்சையாக ஈரான் என்ற ஒரு civilization ஐ ஒரே நாளில் அழிப்பேன் என்று ஆங்கிலத்தில் கூறியது குற்றமல்ல என்று கருதும் ரம்ப் 86 என்று இலக்கத்தில் கூறியதில் மிரண்டுள்ளாராம்.