சுமார் 35 ஆண்டுகள் நிதானமான விலையை கொண்டிருந்த சாக்லேட் (chocolate) கடந்த சுமார் ஒரு ஆண்டு காலமாக பல மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. சாக்லேட் தரத்துக்கு ஏற்ப அவற்றின் விலை முன்னரிலும் 200% முதல் 500% வரை அதிகமாக இருந்தது, தற்போதும் அவ்வாறே உள்ளது. ஆனால் உலக சந்தையில் சாக்லேட் விலை விரைவில் குறைய உள்ளது.
கடந்த ஒரு ஆண்டு காலமாக சாக்லேட்டின் மூலப்பொருளான கொக்கோ பவுடரின் (cocoa) விலை மிகையாக அதிகரித்ததே சாக்லேட் விலை அதிகரிக்க காரணம்.
2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு தொன் கொக்கோ பவுடரின் விலை சுமார் $1,000 முதல் $4,000 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் 2025ம் ஆண்டு ஒரு தொன் கொக்கோவின் விலை $13,000 வரையில் உயர்ந்தது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளான Ivory Coast, Ghana ஆகிய இரண்டும் 50% க்கும் அதிகமான உலக கொக்கோ உற்பத்தியை செய்கின்றன. அப்பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இங்கு கொக்கோ உற்பத்தி கடுமையாக பாதிப்பு அடைந்து இருந்தது. அதனாலேயே அறுவடை குறைந்து கொக்கோ விலை அதிகரித்தது இருந்தது.
தற்போது மீண்டும் கொக்கோ உற்பத்தி அதிகரித்து உள்ளதால் கொக்கோ பவுடரின் விலை மெல்ல இறங்கி வருகிறது. தற்போது தொன் ஒன்று சுமார் $6,000 அளவில் விற்பனை செய்யப்படுகிறது. அதனால் 2026ம் ஆண்டில் சாக்லேட் விலை மீண்டும் குறைவடையும்.
2023ம் ஆண்டு கொக்கோ உற்பத்தி:
1. Ivory Coast: 2,377,442 தொன்
2. Ghana: 653,700 தொன்
3. இந்தோனேசியா: 641,741 தொன்
4. Ecuador: 375,719 தொன்
5. பிரேசில்: 296,145 தொன்
14. இந்தியா: 30,000 தொன்
33. இலங்கை: 1,321 தொன்
