மேலும் இரு எண்ணெய் தாங்கிகள் மீது தாக்குதல்

Iran

பாரசீக வளைகுடா பகுதியில் மேலும் இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் மீது இன்று வியாழன் தாக்குதல்கள் இடம்பெற்று உள்ளன. தாக்குதல்கள் காரணமாக அந்த கப்பல்கள் தீ பற்றிக்கொண்டன.
.
இந்த தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் என்று உடனடியாக அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ளது. ஆனால் ஈரான் தமக்கும் இந்த தாக்குதல்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது.
.
ஜப்பானின் Kokula என்ற கப்பலும், நோர்வேயின் Altair என்ற கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகின. அவற்றில் பணியாற்றிய ஊழியர்கள் (Kokula வில் 21 பேர், Altair இல் 23 பேர்) மீட்க்கப்பட்டு உள்ளனர்.
.