ஏப்ரல் மாதம் இந்திய CO2 வெளியேற்றம் 15% ஆல் குறைவு

India

இந்தியா வெளியிடும்  CO2 அளவு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15% ஆல் குறைந்து உள்ளது. அத்துடன் இது மே மாதம் 30% ஆல் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
.
Carbon Brief என்ற அமைப்பு வெளியிட்ட இந்த கணிப்புக்கு குறைந்து வரும் எரிபொருள் பாவனை, அதிகரித்துவரும் சூரிய சக்தி, காற்றாடிகள் மூலம் உருவாக்கப்படும் மின் என்பனவும் சில காரணங்கள் என்றாலும் கரோனா காரணமாக மக்கள் முடங்கியதே மிகப்பெரிய காணமாக அமைத்துள்ளது.
.
கடந்த 37 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகரித்து வந்துள்ள CO2 வெளியீடு முதல் முறையாக ஏப்ரல் மாதமே வீழ்ச்சி அடைந்துள்ளது.
.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எண்ணெய்/எரிபொருள் பாவனை 18% ஆல் வீழ்ந்துள்ளது.
.
மேற்படி அமைப்பின் கணிப்புப்படி இந்தியாவில் சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் 1 kw மின்னுக்கான செலவு 2.55 ஆகவும், அதேவேளை நிலக்கரி மூலம் பெறப்படும் 1 kw மின்னுக்கான செலவு 3.38 ஆகவும் உள்ளன.
.